குளிர் காலங்களில் ஏற்படக்கூடிய வைரஸ் காய்ச்சலினை மாற்றுவதற்கு தற்போது மாத்திரைகள் காணப்படுகின்றன.
எனினும் குறித்த மாத்திரைகள் 72 தொடக்கம் 96 மணி நேரம் வரை போரிட்டே குறித்த வைரஸ்களை அழிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இப்படியிருக்கையில் 24 மணி நேரத்தில் காய்ச்சல் வைரஸ்களை அழிப்பதற்கான மாத்திரைகளை உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் நிறுவனம் ஒன்று இறங்கியுள்ளது.
Drugmaker Shionogi எனும் நிறுவனமே இம் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மேலும் இம் மாத்திரையானது வகை A, B ஆகிய இரண்டு வைரஸ்களுக்கும் எதிராக பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குறித்த மாத்திரையை பயன்படுத்துவதற்கான அனுமதியை இவ் வருடம் பெறவுள்ள அதேவேளை 2019ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.