பூமியை நெருங்கும் கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம்: புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
411Shares
411Shares
lankasrimarket.com

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் பூமியை நெருங்கியுள்ளதற்கான ஆதாரத்தை வானியல் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

சீனாவின் கட்டுப்பாட்டை இழந்த Tiangong-1 விண்வெளி நிலையமானது பூமியை நெருங்கி உள்ளதாக வானியல் நிபுணர் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மார்ச் 9-ஆம் திகதி பதிவான இந்த புகைப்படமானது Gianluca Masi என்ற வானியல் நிபுணர் ரோம் நகரில் வைத்து பதிவு செய்துள்ளார்.

நீண்ட ஒரு ஒளிக்கீற்று போன்று தெரியும் இந்த விண்வெளி நிலையம் பூமியில் மோதும் நாள் நெருங்கியுள்ளதை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது Tiangong-1 விண்வெளி நிலையமானது பூமியின் நிழலில் மறைந்துள்ளது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மட்டுமின்றி எதிர்வரும் 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் குறித்த விண்வெளி நிலையத்தை சில பகுதிகளில் உள்ள மக்கள் தொலைநோக்கு கருவிகளால் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர்களின் கருத்துப்படி ஏப்ரல் 3 ஆம் திகதி குறித்த சீன விண்வெளி நிலையம் பூமியில் மோத உள்ளது.

இருப்பினும் பூமியில் எந்த பகுதியில் அது மோத உள்ளது என்பதை இதுவரை கணிக்க முடியாத நிலையில் நிபுணர்கள் உள்ளனர்.

மேலும், அதன் உடைந்த பாகங்கள் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பதிக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மட்டுமின்றி வடக்கு சீனா, மத்திய இத்தாலி, வடக்கு ஸ்பெயின், மத்திய கிழக்கு நாடுகள், நியூசிலாந்து, தாஸ்மேனியா, தென் அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு அமெரிக்க மாகாணங்கள் என சில நாடுகளை நிபுணர்கள் அதிக வாய்ப்புள்ள பகுதியாக குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள் பூமியில் விழத் தொடங்கிய இறுதி வாரத்தில் மட்டுமே எந்த பகுதியில் அது மோத இருக்கிறது என கணிக்க முடியும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் Gianluca Masi அதை மறுத்துள்ளதுடன், பூமியில் நெருங்கும்போதே அந்த விண்வெளி நிலையமானது சுக்கலாக சிதறி மாயமாகும் என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்