உலகமே கொண்டாடும் அறிவியல் உலகின் பிதாமகனின் முக்கிய கோட்பாடுகள்!

Report Print Harishan in விஞ்ஞானம்

பிரித்தானியாவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி, அறிஞர் என பன்முக வித்தகர் ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76-வது வயதில் இன்று காலமானார்.

மறைந்த அந்த மாமேதையின் வாழ்க்கை, நாம் அனைவருக்கும் அதிலும் குறிப்பாக விஞ்ஞானியாக விரும்பும் சிறுவர்கள் முதல் விஞ்ஞானியாக பணியாற்றும் அறிஞர்கள் வரை அனைவருக்கும் கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம்.

அப்படி என்ன தான் சாதித்து விட்டார், அந்த சர்க்கர நாற்காலி விஞ்ஞானி என கேட்கிறீர்களா? ஆம், தனது 21-வது வயதில் அறிய வகை நரம்பியல் நோய் தாக்கியதால் சர்க்கர நாற்காலியில் அம்ரந்தவர் ஸ்டீபன்.

அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக உலகமே வியக்கும் அளவிற்கு பல முக்கிய கோட்பாடுகளை ஸ்டீபன் வகுத்து கொடுத்துள்ளார்.

இன்றளவும் உலக அறிஞர்களுக்கு சவால் விட்டுக் கொண்டு இருக்கும் பெரு வெடிப்புக் கோட்பாடு(Big Bang Theory), குவியக் கொள்கை(Quantum Theory), கருத்துளை கோட்பாடு(Black Hole Theory) பொன்ற கோட்பாடுகள் ஸ்டீபன் வாழ்க்கையின் சில மைல்கல்கள்.

பெரு வெடிப்புக் கோட்பாடு என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இது தான் என்பது கூடுதல் சிறப்பு.

கருந்துளை கோட்பாடு என்பது, இவற்றின் எல்லைக்கு செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.

மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர்.

மட்டுமின்றி, கடவுள் மறுப்பு கோட்பாடு, The origins of the universe உள்ளிட்ட பல முக்கிய கோட்பாடுகளையும் ஸ்டீபன் வகுத்து கொடுத்துள்ளார்.

ஆராய்ச்சி துறையில் அவர் ஆற்றிய பணிகளுக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் 12 கவுரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார் ஸ்டீபன்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்