அடுத்த ஆண்டு மனிதர்கள் செவ்வாய் கிரகம் பயணிக்கலாம் : எலான் மஸ்க்

Report Print Athavan in விஞ்ஞானம்

”அடுத்த ஆண்டின் முதல் பாதியில் செவ்வாய் கிரகம் செல்ல தேவையான விண்வெளி ஓடம் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்த தாயார் நிலையில் இருக்கும்” என்று ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்(46) தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று அமெரிக்காவின் Texas மாகணத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர் “ மிகவும் கடினமான, ஆபத்தான பயணம் மேற்கொள்ள தேவைப்படும் விண்வெளி ஓடம்(ஸ்பேஸ் ஷிப்) அடுத்த ஆண்டின் முதற்பாதியில் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

”ஆரம்பத்தில் செவ்வாய் கிரக பயணம் பற்றி நான் பேசிய போது பலர் அதை நம்பவில்லை. இருப்பினும் இன்று நாங்கள் அடைந்துள்ள இலக்கைப் பற்றி அனைவரும் அறிவர், இந்த பயணம் முதன்முதலாக சோதனை முறையில் நடத்தப்படுவதால் அதில் ஆபத்துகள் அதிகம் இருக்கும் அவ்வளவு ஏன் முதன் முறை பயணம் செய்பவர்கள் விபத்தில் இறக்கவும் நேரிடலாம் உயிர்பிழைப்பவர்கள் ஆச்சரியத்திலும் மூழ்கலாம்” என்று எலான் மஸ்க் பேசினார்.

இந்த விண்வெளி ஓடத்தில் பயணம் செய்பவர்கள் செவ்வாய் கிரகம் சென்று அங்கிருந்து பூமிக்கு திரும்பி வரலாம். அதற்கேற்றபடி அதை மீண்டும் பயன்படுத்தக்க வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அது எவ்வளவு பெறியதாக இருக்கும், அதன் வடிவமைப்பு எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய எந்த தகவலையும் எலான் மஸ்க் தெரிவிக்கவில்லை.

இதைபற்றி கருத்து தெரிவித்த தென்னாப்பிரிக்க விமான வடிவமைப்பாளர் ஒருவர் செவ்வாய் கிரக பயணம் என்பது மனிதர்களுக்கு சாத்தியமாகக்கூடிய ஒன்று தான்.

அனைத்து நாடுகளும் இந்த திட்டதில் ஆர்வம் செலுத்தி வருகிறது. ஆனால் ஒரு முறை எலான் மஸ்க் இதை சாத்தியப்படுத்தி காட்டிவிட்டால் பின்னர் இது உலக நாடுகளால் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகராமாக மாறும்.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் தொழில்முதலீடும் செய்யலாம் அதற்கான காலமும் வரும் என அவர் தெரிவித்தார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்