காந்தப் புலத்தை இலகுவாக கண்டறியும் பறவைகள்: சூட்சுமத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
232Shares

பூமியில் வடக்கு தெற்காக காந்தப் புலம் காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

இக் காந்தப் புலத்தை இலகுவாகக் கண்டறிந்து அதற்கு ஏற்ப செயற்படும் ஆற்றல் பறவைகளுக்கு காணப்படுகின்றது.

காந்தப் புலத்தினை கண்டறிவதற்கு இரும்பு சார்ந்த பதார்த்தம் காணப்படவேண்டியது அவசியமாகும்.

எனினும் இரும்பு பாகங்கள் அற்ற பறவைகள் எவ்வாறு காந்தப் புலத்தை கண்டறிகின்றன என்ற மர்மம் நீண்ட நாளாக நிலவி வந்தது.

இந்த மர்மத்திற்கு தற்போது விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

பறவைகளின் கண்களில் உள்ள ஒரு வகை புரதமே பூமியின் காந்தப் புலத்தைக் கண்டறிய அவற்றிற்கு உதவுகின்றன என கண்டுபிடித்துள்ளனர்.

இப் புரதமானது Cry4 என அழைக்கப்படுகின்றது.

மேலும் இப் புரதம் நீல நிறக் கதிர்களுக்கு உறுத்துணர்ச்சி உடையதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்