அணு மின்கலப் பொதியை உருவாக்கி மின்சார தயாரிப்பில் சாதனை படைத்த விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
90Shares
90Shares
lankasrimarket.com

தற்போது பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் மின்கலங்களை விடவும் பல மடங்கு சக்தி வாய்ந்த அணு மின்கலப் பொதியினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

நிக்கல் மூலகத்தின் புறதிருப்பத்தினைக் கொண்டு இந்த அணு மின்கலப் பொதியினை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நிக்கல் ஆனது 25 வருட ஆயுட்காலத்தினைக் கொண்டது.

எனவே இதன் கதிர்த்தொழிற்பாடு நீண்ட காலத்திற்கு காணப்படும் என்பதால் மின்கலப் பொதியின் ஆயுட்காலமும் அதிகமாகவே இருக்கும்.

ஒவ்வொன்றும் இரண்டு மைக்ரோ மீற்றர் படைகள் உடைய நிக்கல் 63 புறதிருப்பம் மற்றும் வைரக் கலம் என்பன இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதிலிருந்து மணித்தியாலத்திற்கு 3,300 மில்லி வாற்ஸ் மின்சக்தி வெளிவிடப்படும்.

இது சாதாரண மின்கலங்களை விடவும் 10 மடங்கு அதிகமாகும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்