அறியாமலே ஆண்டுதோறும் நாம் உண்ணும் பிளாஸ்டிக்கின் அளவு எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
198Shares
198Shares
ibctamil.com

பிளாஸ்டிக்கினால் ஏற்படும் சூழல் பாதுகாப்புக்கள் தொடர்பில் பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறிருக்கையில் எம்மை அறியாமலே நாம் ஆண்டு தோறும் உணவு வாயிலாக பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு வருகின்றோம் என ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் அளவானது 5 மில்லி மீற்றர் தொடக்கம் 100 நனோ மீற்றர் வரையான விட்டம் கொண்ட சிறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு சமனாகும்.

அதாவது 1000 துண்டுகளில் பத்தினை ஆண்டுதோறும் உணவாக உட்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை உணவுச் சங்கிலி மூலமாகவே எமக்கு கடத்தப்படுகின்றது.

உதாரணமாக கடலில் வாழும் மீன்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்ண நேரிடுகின்றன. அம் மீன்களை நாம் உணவாக்கும்போது எம்மை அறியாமலே நாம் பிளாஸ்டிக் பொருட்களை உணவாக உட்கொள்கின்றோம்.

அதோபோன்று ஒரு கிலோ கிராம் கடல் உப்பில் 600 மைக்ரோ பிளேட் பிளாஸ்டிக் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்