விண்வெளியிலிருந்து தாவரங்களை கண்காணிக்க நாசாவின் புதிய முயற்சி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

தாவரங்களுக்கு கிடைக்கும் வெப்பநிலை மற்றும் நீரை தாவரங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை கண்டறிய நாசா விண்வெளி ஆய்வு மையம் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

இதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) விசேட உபகரணம் ஒன்று பொருத்தப்படவுள்ளது.

இதன் ஊடாக தாவரங்களின் ஆரோக்கியம் ஆராயப்படவுள்ளது.

ECOSTRESS எனும் குறித்த சாதனத்தினை எதிர்வரும் 29ம் திகதி புளோரிடாவில் உள்ள Cape Canaveral விமானப்படை ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers