கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல்லில் ஏற்பட்ட நம்பமுடியாத மாற்றம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
65Shares
65Shares
ibctamil.com

சூரியனின் ஒழுக்கில் பயணம் செய்துகொண்டிருந்த விண்கல் ஒன்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

தற்போது இவ் விண்கல் தொடர்பில் சில ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2017 YE5 என பெயரிடப்பட்டிருந்த குறித்த விண்கல் ஆரம்பத்தில் ஒரு கல் என எண்ணப்பட்டிருந்த போதிலும் தற்போது இரு கற்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி சூரியனிலிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் வந்திருப்பதனால் குளிர் தன்மையை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஏறத்தாழ 6 மில்லியன் கிலோ மீற்றர்கள் இடைவெளியில் சூரியனை விட்டு வெளியே பயணித்துக்கொண்டிருக்கின்றது.

மேலும் இவை பூமிக்கு அண்மையில் உள்ள 15 சதவீதமான விண்கற்களை விடவும் பருமனில் பெரியவை எனவும், ஏறத்தாழ 200 மீற்றர்கள் குறுக்கு நீளத்தை உடையவை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்