மோசமான மனநிலையிலிருப்பது உண்மையில் உங்களை ஆக்கபூர்வமானதாக ஆக்கும் என்கிறது விஞ்ஞானம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
69Shares
69Shares
ibctamil.com

மோசமான அதிர்வுகள் உங்களை வளமானதாக ஆக்கும் என ஆய்வுகள் சொல்லுகின்றன. இது ஒரு விடயத்தில் கவனம் செலுத்துவதை அதிகரிக்கிறது, நேரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, இலக்குகளில் அதிக அக்கறையுடன் செயற்பட உதவுகிறது.

ஆயினும் அது நீங்கள் எவ்வகையானவர் என்பதிலும் தங்கியுள்ளது. சிலர் அதிகளவில் எதிர் செயல்களை காட்டும் மனோநிலையை கொண்டவர்கள், அவர்களின் உணர்வு ரீதியிலான விளைவுகள் கடுமையாக இருப்பதுடன் நீண்ட நேரத்திற்கிருக்கும்.

மற்றவர்கள் குறைந்தளவில் எதிர் செயல்களை காட்டுபவர்கள், அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினாலும் அது நீண்ட நேரத்திற்கிருப்பதில்லை.

இங்கு ஆய்வில் குறைந்தளவு எதிர்ச்செயல்களை காட்டுபவர்களில் இது அந்தளவில் பலனை காட்டியிருக்கவில்லை. உண்மையில் இவர்களின் வினைத்திறன் குறைவடைந்திருந்தது.

நல்ல மனநிலை உடையவர்களின் அறிவாற்றலில் எந்தவொரு மாற்றமும் இனங்காணப்பட்டிருக்கவில்லை.

ஆய்வாளர்களின் கருத்து யாதெனில், அதிகளவு எதிர்ச்செயல்களைக் காட்டுவோர் மறையான உணர்வுகளுக்குப் பழக்கப்பட்டோர், இதனால் மோசமான மனநிலையிலும் செயற்படக்கூடியவர்கள் என்கின்றார்கள்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்