முடி உதிர்வு மற்றும் சுருக்கங்கள் மீளுவதை அதானித்த விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
111Shares
111Shares
ibctamil.com

புதிய ஆய்வொன்று முடியுதிர்வு, தோல் சுருக்கங்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

கலங்களின் வாழ்க்கைக்குத் தேவையான 90 வீதமான இரசாயன சக்தி இழைமணிகளிலேயே சேமிக்கப்டுகின்றன.

மனிதன் வயதாகும் போது இழைமணியின் செயற்பாடும் நலிவடைந்து செல்கிறது.

இது முடியுதிர்வு, சுருக்கங்கள் போன்ற வயதாதலிற்கான பெரும்பாலான அறிகுறிகளைக் காட்டுகின்றது.

இழைமணிக்குரிய DNA இழக்கப்படும் போது அது இருதய நோய், புற்று நோய், நீரிழிவு நோய் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு காரணமாகலாம் என நம்பப்படுகிறது.

விஞ்ஞானிகள் எலிகளில் விகாரத்தை ஏற்படுத்தி இழைமணியின் தொழிற்பாட்டை நலிவடையச் செய்தனர்.

விளைவாக நான்கே வாரங்களில் அதன் முடிகள் உதிர்வடைவதை அவதானிக்க முடிந்திருக்கிறது, 4-8 வாரங்களில் சுருங்கிய தோல்களை விருத்திசெய்யத் தொடங்கியது.

தோல் சுருக்கம் ஆண் எலிகளை விட பெண் எலிகளில் அதிகமாகக் காணப்பட்டது.

விஞ்ஞானிகள் விகாரத்தை இல்லாது செய்த போது மேற்படி எதிர் விளைவுகளிலிருந்து மீண்டுவருவது அவதானிக்கப்பட்டது. எலிகளின் பழைய தோற்றமும், இழைமணியின் ஆரம்பச் செயற்பாடும் திரும்பப் பெறப்பட்டது.

இது தற்போது அடுத்த கட்ட சிகிச்சை முறைக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்