பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சந்திரன் உயிரினங்கள் வசிக்கத்தக்க இயல்புகளைக் கொண்டிருந்திருக்கலாம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
71Shares
71Shares
ibctamil.com

தற்போதைய சந்திரனானது தரிசாக காணப்படுகிறது. அங்கு உயிரினங்களில்லை, வளிமண்டலமில்லை, மின்காந்த மண்டலம் இல்லை, உயிரிகள் தோன்றுவதற்குரிய எந்தவொரு இரசாயனமும் இல்லை. அதன் வெப்பநிலையும் பாரிய மாறல்களை காட்டக்கூடியது.

ஆனாலும் சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அதன் மேற்பரப்பு எளிய உயிரினங்கள் வாழ்வதற்குரிய போதிய நிலைமைகளைக் கொண்டிருக்கலாம் என நம்பப்டுகிறது.

இது தொடர்பான விடயங்கள் Astrobiology ஆய்வுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அத் தகல்களின்படி இக் காலம் கிட்டத்தட்ட 4 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலமாகும். இது சந்திரன் தோன்றிய காலப்பகுதிக்கு அண்மையாகவுள்ள காலப்பகுதி.

அதன் பின்னர் 3.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னரும் இது போன்ற சூழ்நிலை காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆய்வாளர்களின் கருத்துப்படி சந்திரன் ஆவியாகக்கூடிய வாயுக்களை அதன் உள் பகுதியிலிருந்து கக்கியிருந்ததாகவும், இது அதன் மேற்பரப்பில் நீரையும், வளிமண்டலத்தையும் தோற்றுவித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

எனவே இது தற்காலிகமாக உயிரின வாழ்க்கைக்குரிய சூழ்நிலைகளைக் கொண்டிருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்