இதயத்தின் கட்டமைப்பை மாற்றும் வளி மாசுக்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
55Shares
55Shares
ibctamil.com

வளி மாசுக்கள் இதய கட்டமைப்பில் முக்கிய தாக்கத்தைக் கொண்டுவருவதாக தெரியவருகிறது.

லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வளி மாசுக்கள் எவ்வாறு பங்கேற்றவர்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது தொடர்பாக ஆராய்ச்சியொன்றை மேற்கொண்டிருந்தனர்.

Circulation எனும் ஆய்வுப் பக்கத்தில் கடந்த வெள்ளியன்று இது தொடர்பான முடிவுகளை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

இதிலிருந்து இவை இதயத்தை அதிகம் பாதிப்பது தெரியவந்திருக்கின்றது.

இதற்கென 4000 பங்கேற்பாளர்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. இவர்கள் இரத்த சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர், ஸ்கேன் மற்றும் கார்டியாக் காந்த அதிர்வு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன் மூலம் இதயத்தின் தொழிற்பாடு, அளவு மற்றும் எடை என்பன அளவிடப்பட்டிருந்தது.

அதேவேளை அவர்களின் வாழ்க்கை முறை, ஆரோக்கியம் தொடர்பான விடயங்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடம் தொடர்பான விடயங்களும் சேகரிக்கப்பட்டிருந்தன.

இங்கு சன நெருக்கடியான இடங்களில் வசிப்பவர்களில் இதயத்தின் இடது மற்றும் வலது புற கீழறைகள் பெரிதாகியிருப்பது அவதானிக்கப்பட்டிருந்தது. இக் கீழறைகள் குருதியைப் பம்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

போக்குவரத்து அதிகமான இவ்வாறான வீதிகளில் எரிபொருள் தகனத்திற்குள்ளாகி மற்றும் வழிகளில் வெளிவரும் நைதரசன் டையொக்சைட்டு வளியில் கலந்து பரவுகிறது.

இவற்றுக்கு வெளிக்காட்டப் படுவதாலேயே இவ்வாறான விளைவுகள் ஏற்படுகின்றது.

விஞ்ஞானிகள் அதிகளவில் மாசுக்களுக்கு வெளிக்காட்டப்படுவது இதயத்தின் முிதான தாக்கமும் அதிகரிப்பதற்கு ஏதுவாகிறது என தெரிவிக்கின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்