நண்பர்களுடன் இருக்கும் போது ஸ்மார்ட் போன் பாவிக்கலாமா? விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
136Shares
136Shares
lankasrimarket.com

தற்போதைய டிஜிட்டல் வாழ்க்கை நாம் முகத்துக்கு முகம் ஏற்படுத்தும் இடைத்தொடர்புகளால் உண்டாகும் சந்தோசங்களை வலுவிழக்கச்செய்கின்றன.

இவ் விளைவு இளம் தலைமுறையில் அதிகம் என சொல்லப்படுகிறது.

நீங்கள் நினைக்கக்கூடும் இலத்திரனியல் சாதனங்களுடன் வளர்ந்தவர்கள் டிஜிட்டல் வாழ்க்கையில் ஆளுமை மிக்கவர்களாக வரக்கூடும் மற்றும் அவற்றிலிருந்து அதிகப்படியான சந்தோசங்களைப் பெற முடியும் என.

ஆனால் உண்மை அதுவல்ல, சொல்கிறது புதிய ஆய்வு.

அமெரிக்க உளவியல் சங்கத்தால் நடாத்தப்பட்ட வருடாந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட இருவேறு அறிக்கைகளில் சிறிய தொலைபேசி பாவனை கூட மக்களை திசை திருப்புகின்றது, இடைவெளியைக் கூட்டுகின்றது, அவர்களை வலுவிழந்தவர்களாக ஆக்குகின்றது என்கின்றன.

120 கல்லூரி மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சமூக இடைத்தொடர்புகளில் நீண்ட தாக்கத்தைக் கொண்டுவருவதாக சொல்கிறது.

இங்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு 5 தடைவைகள் என ஒரு வாரத்திற்கு நிங்கள் தற்போது என்ன உணர்கிறீர்கள் மற்றும் கடந்த 15 நிமிடங்களில் என்ன செய்தீர்கள் என வினவப்பட்டிருந்தனர்.

இதன்போது ஆய்வாளர்கள் கூட நினைத்திராவண்ணம் மாணவர்கள் ஸ்மாட்போன் பாவனையின் பின்னர் நேருக்கு நேரான இடைத்தொடர்புகளின் போது கவனம் கலைந்தவர்களாகக் காணப்பட்டிருந்தனர்.

அவர்கள் குறைந்தளவான அக்கறையும், சந்தோசத்தையும் நெருக்கமான சமூகமயமாக்கலில் காட்டியிருந்தனர்.

இதே போன்ற மற்றுமொரு ஆய்வு ஸமாட் போன் பாவனையானது நண்பர்களுன் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் போது கிடைக்கும் சந்தோசத்தையும், ஈடுபாட்டையும் குறைப்பதாக சொல்லுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்