மப்பெட் இயல்புகளை செவ்வாய் கிரகத்தில் இனங்கண்ட நாஸா விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

செவ்வாயில் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பாறைகளில் மறைக்கப்ட்டிருந்த நமக்குப் பழக்கமான முகங்களின் உருவங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இவ் உருவம் இரு பெரு கண்களைக் கொண்டுள்ளதுடன், பெரிய வட்ட மூக்கையும் கொண்டுள்ளது.

கடந்த இரு மாதங்களாக தூசுப் படலம் செவ்வாயைச் சுற்றிக் காணப்பட்டிருந்தது. ஆனாலும் நாஸாவால் Mars Reconnaissance Orbiter இனைப் பயன்படுத்தி இதன் தெளிவான உருவத்தைப் படம்பிடித்திருக்க முடிந்திருக்கின்றது.

இவ் விண்கலம் செவ்வாயை வலம் வருவதன் மூலம் அதனை ஆராய்ந்து வருகிறது. இவ் விண்கலம் 2005 இல் செவ்வாயில் போதுமான அளவிற்கு நீருள்ளதா என ஆராயவென ஏவப்பட்டிருந்தது.

இவ் விண்கலத்தில் High Resolution Imaging Science Experiment (HiRISE) எனும் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாஸா தற்போது கண்டுபிடித்துள்ள உருவத்தை “pareidolia” எனப் பெயரிட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers