செவ்வாய் நோக்கிய நாசாவின் InSight விண்வெளி ஓடம் அரைப் பங்கு தூரத்தை கடந்து பயணிக்கின்றது

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
124Shares
124Shares
lankasrimarket.com

செவ்வாய் கிரகம் தொடர்பிலான ஆய்வுகளை நாளுக்கு நாள் நாசா நிறுவனம் அதிகப்படுத்திக்கொண்டே செல்கின்றது.

இதன் ஒரு அங்கமாக InSight எனும் விண்வெளி ஓடம் ஒன்றினை செவ்வாய் கிரகம் நோக்கிய அனுப்பியிருந்தது.

இவ் ஓடமானது தற்போது மொத்த பயண தூரத்தில் அரைப்பங்கினை கடந்து சென்றுகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாது விண்ணில் ஏவப்பட்டு 107 நாட்கள் கடந்துள்ள நிலையில் சுமார் 277 மில்லியன் கிலோ மீற்றர்களை எட்டியுள்ளது.

இந்நிலையில் எஞ்சியுள்ள 208 கிலோ மீற்றர்கள் தூரம் பயணிப்பதற்கு இன்னும் 98 நாட்கள் வரை எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், உஷ்ணப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு என்பவற்றினை ஆராயும் பொருட்டு இவ் விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்