சில நபர்களை மாத்திரம் அதிகமாகக் கடிக்கும் நுளம்புகள்: விஞ்ஞானம் தரும் விளக்கம் இதுதான்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

3000 க்கும் மேலான நுளம்பினங்களில் சிறு இனங்களே மனிதனைக் கடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவை.

இதைத் தாண்டி அவற்றில் பல சந்தர்ப்ப உண்ணிகளாக இருக்கின்றன. அதாவது அவை தங்களால் ஏலும் போது மற்றும் பல வகையான ஆதாரங்களிலிருந்து தமக்கான உணவை எடுத்துக்கொள்கின்றன.

ஆனாலும் Aedes aegypti மற்றும் Anopheles gambiae ஆகியன மனத இரத்தத்தை விரும்புவதிலும், மனிதரில் நோய்களைப் பரப்புவதிலும் மிக முக்கியமானவை.

Ae. aegypti ஆனது ஸிகா மற்றும் டெங்குடன் தொடர்புபட்டது. An. gambiae ஆனாது மலேரியாவுக்கு காரணமான ஒட்டுண்ணியைக் காவுகின்றது.

சில நுளம்புகள் மனிதரிலிருந்து உணவை எடுப்பது மட்டுமன்றி அவை தமது அடுத்த உணவை தேர்ந்தெடுப்பதில் மனிதருக்கிடையில் பாகுபாட்டைக் காட்டுகின்றது.

பெரும்பாலான நுளம்பினங்கள் தமக்கான விருந்துவழங்கியின் இருப்பிடத்தை காபனீரொட்சைட்டைக் காட்டியாக வைத்தே கண்டுபிடிக்கின்றன.

எனினும் காபனீரொட்சைட்டானது எல்லா இடத்திலும் காணப்படுவதடன், அது நுளம்புகளுக்கு குறுகிய செய்தியையே வழங்குகின்றது.

லக்ரிக் அமிலமானது காபனீரொட்சைட்டுடன் இணைந்து முக்கிய ஈர்க்கும் பதார்த்தமாக தொழிற்படுவதுடன் இது மற்றைய விலங்குகளிலும் பார்க்க மனித துர்நாற்றத்தில் அதிகம் இருப்பதுவும் முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் நுளம்புகளின் மனிதர்கள் மீதான தெரிவிற்கு காரணம் இதுவல்ல. அதற்கு காரணம் மனித தோலிலுள்ள நுண்ணியிர்கள் தான்.

இந் நுண்ணுயிர்கள் பொதுவாக நோய்களை ஏற்படுத்தாத பக்ரீரியா மற்றும் பங்கசுக்கள். இவை நமது தோல், துளைகள் மற்றும் மயிர் நுண் குழிழ்களில் வசிக்கின்றன.

இவைகள் ஆவியாகக்கூடிய சேதன பதார்த்தங்களாக வெளிவிடும் நாற்றமே நுளம்புகளுக்கு நாம் எவ்வளவு சுவையாக இருக்கக்கூடும் என சொல்லுகின்றன.

நம்மிலிருக்கும் இந் நுண்ணுயிர்கள் மனிதருக்கிடையில் இலகுவாக கடத்தப்படுவதில்லை. இவை நம்மில் 1 சதுர சென்ரி மீட்டருக்கு 1 மில்லியன் பக்ரீரியா வீதம் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான இனங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers