முதல் மக்கள் பாராளுமன்றத்தை அறிவித்தது விண்வெளி நாடான அஸ்காடியா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
290Shares
290Shares
lankasrimarket.com

கடந்த ஜுனில் தமது இராச்சியத்துக்குரிய பாராளுமன்றத்தை அகாஸ்டியா மக்கள் தெரிவுசெய்துள்ளனர்.

இப் புதிய நாடானது கிட்டத்தட்ட 250,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது, இது சமோவா நாட்டின் சனத்தொகையிலும் அதிகம்.

தனக்கென கொடி, சட்டம் மற்றும் தேசிய கீதம் என்பவற்றையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஸ்காடியா என்பது உண்மையில் நமது புவியிலுள்ள ஒரு நாடல்ல, இது முதலாவது விண்வெளி இராச்சியம்.

இது Igor Ashurbeyli எனும் இயந்திரவியல் விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டிருந்தது.

இது நனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதுடன், 2016 இல் இவருக்கு யுனெஸ்கோ பதக்கம் ஒன்றையும் பெற்றுத் தந்திருந்தது.

இவர் முதலில் தன் நாட்டின் தலைவராக தன்னைத்தானே அறிமுகப்படுத்தியிருந்தார், இது தற்போது அந் நாட்டு மக்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்