வியாழன் கிரகத்தில் பூமியை விட பல மடங்கு தண்ணீர்! ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள்

Report Print Kabilan in விஞ்ஞானம்

பூமியை விட அதிக அளவு தண்ணீர் வியாழன் கிரகத்தில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் குழு தற்போது கண்டுபிடித்துள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1995ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி, ‘கலிலியோ’ என்ற விண்கலத்தை வியாழன் கிரகத்தை சோதனை செய்ய அனுப்பியது.

இந்த விண்கலம் தற்போது பெரிய சிகப்பு புள்ளி ஒன்றை வியாழன் கிரகத்தில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் வியாழனில் அதிகமாக உள்ளது. அதேபோல் பல மடங்கு வியாழனில் வளிமண்டலம் பூமியை விட அடர்த்தியாக உள்ளது. இதன் காரணமாக, வியாழனில் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதனை குறிக்கும் வகையில் வியாழனில் பெரிய அளவில் செந்நிற புள்ளி உள்ளது. இது ஆசிய கண்டத்தை விட பெரியதாக இருக்கும். இது முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பியுள்ளது.

இதனை விஞ்ஞானிகள் அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், நாசா ஆய்வக பொருட்களை வைத்தும் கண்டுபிடித்துள்ளனர். இதை சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது.

மேலும் வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த செந்நிற புள்ளியில் மட்டும், பூமியில் உள்ள கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்பதால், பூமியை விட 5 மடங்கு அதிகம் தண்ணீர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers