நீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
73Shares
73Shares
ibctamil.com

வகை 2 நிரிழிவு நோய்க்கெதிராகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் பிறப்புறுப்பு சார்ந்த தொற்று நோய்களை ஏற்படுத்தும் அபாயமுள்ளதாக தெருவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த புதனன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது SGLT2 வகை மருந்துகள் பிறப்புறுப்புத் தொற்றுக்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என தெரியவருகிறது.

இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில்,

நமது உடல் முழுவதும் பக்ரீரியாக்கள் உள்ளன. இவை அதிகம் குளுக்கோஸை விரும்பும் நுண்ணங்கிகள்.

நாம் நமது சிறுநீர்ப் பாதையினூடாக அதிக குளுக்கோஸை வெளியேற்றும்போது அங்கு பக்ரீரியாக்களின் பெருக்கம் அதிகமாகின்றது.

இச் சிறுநீர் வழிக்கு அண்மையாகவே இனப்பெருக்க அங்கங்கள் காணப்படுவதால் அவை இலகுவில் இவ் அங்கங்களைத் தாக்குவதாக சொல்லப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்