தசைநார்த் தேய்வை தடுக்க விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விஞ்ஞானிகள் முதன்முறையாக தசைநார் தேய்வுக்கெதிராக மரபணுத் திருத்தமுறை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

இக் கண்டுபிடிப்பானது மனிதர்களில் மேற்படி நிலைமைகளிற்கு சிகிச்சையளிப்பதற்கான முக்கிய படிநிலையாகப் பார்க்கப்படுகிறது.

தசைநார்த் தேய்வானது இலகுவில் குணப்படுத்தப்படமுடியாத நோய் நிலைமை ஆகும்.

இது தசைத் தொழிற்பாட்டு இழப்பிற்கு காரணமாகி தசை நார்களை வலுவிழக்கச் செய்கின்றது.

தசைநார் தேய்வானது ஒரு குறித்த வகை புரத இழப்புக் காரணமாகவே ஏற்படுகிறது.

அண்மையில் நாய்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றில் விஞ்ஞானிகளால் அக் குறித்த புரதத்தை பகுதியாக மறுபடியும் சேமிக்க முடிந்திருக்கின்றது.

எனவே இத் தொழில்நுட்பத்தை வருங்காலத்தில் மனிதரிலும் பரிசீலிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெருவிக்கின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்