அதிக செறிவுடைய லிப்போ புரதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
251Shares
251Shares
lankasrimarket.com

அதிக செறிவுடைய லிப்போ புரதமும் இதயத் தாக்குகளை ஏற்படுத்தி இறப்புக்களைத் தோற்றுவிக்கலாம் என புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அதிக செறிவுடைய லிப்போ புரதமானது (HDL) தீங்கற்ற கொலஸ்திரோல் என குறிப்பிடப்படுகின்றது.

காரணம் இவை குருதிக் குழாய்களில் ஏற்படக்கூடிய அடைப்புக்களை தடுப்பதுடன், கொலஸ்திரோலின் வேறு வகைகள் குருதியிலிருந்து ஈரல் மற்றும் வேறு அங்கங்களுக்கும் கொண்டுசெல்வதையும் தடுக்கின்றது.

இருந்தபோதும் இவற்றின் மிகையான பாவனைகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி இதுவரையில் முழுமையாக ஆராயப்பட்டிருந்ததில்லை.

தற்போது இது தொடர்பாக 5,969 பேரில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்விலேயே இவ் HDL இன் மட்டம் அதிகரிக்கும் போது அது எதிர் விளைவுகளைத் தருவது தெரியவந்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்