ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட சாராய வடிப்பகம் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இஸ்ரேலில் உள்ள பாறையொன்றில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய சாரய வடிப்பகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் பாறையில் காணப்பட்ட எச்சங்களை ஆய்வுக்குட்படுத்தியதிலிருந்து சுமார் 13,000 வருடங்கள் பழமையானதாக குறித்த சாராய வடிப்பகம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது..

எவ்வாறெனினும் மது காய்ச்சுதல் செயற்பாடானது 5,000 வருடங்கள் பழமையானது என முன்னர் கருதப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பானது அதன் வரலாற்றை இன்னும் பின்நோக்கியே நகர்த்துகிறது.

அதேநேரம் ஆரம்ப காலத்தில் சாராயமானது பாண் உற்பத்தியின் பக்க விளைவாக இருந்திருக்கக்கூடும் என்ற நிலைப்பாடும் தற்போது பொய்ப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்