சஹாரா பாலைவனைத்தை பசுமை நிறைந்ததாக மாற்ற முடியும்: ஆய்வாளர்களின் அசத்தல் ஐடியா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
212Shares
212Shares
ibctamil.com

சஹாரா பாலைவனப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் காற்றாலைகள் மற்றும் சூரியக்கலங்களை நிறுவுவதன் மூலம் மழைவீழ்ச்சி, வெப்பநிலை மற்றும் தாவர வளர்ச்சிகளில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் என ஆய்வாளர்கள் தெருவிக்கின்றனர்.

இவர்களது ஆய்வின்படி காற்றாலைகளின் செயற்பாடு காரணமாக பிரதேச மழைவீழ்ச்சியை இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சூரியக்கலங்களும் தொழிற்பாட்டு ரீதியில் மாறுபட்டதாகக் காணப்படினும் இதே விளைவைத் தரக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

தாவரப் பரம்பல் குறைவான சகாராப் பாலைவனமானது சூரியனுக்கும், காற்றுக்கும் அதிகளவில் வெளிக்காட்டப்பட்டுள்ள பிரதேசமாகும்.

இங்கு பாரியளவில் புதுப்பிக்கக்கூடிய சக்திவள முதல்களை நிறுவுவதன்மூலம் தற்போது உலகம் பயன்படுத்தும் மொத்த சக்தியிலும் நான்கு மடங்கான சக்தியை நுகர முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இது மழைவீழ்ச்சிப் போக்கில் மாற்றத்தைக் கொண்டுவருவதால் தாவர வளர்ச்சி 20 வீதத்தினால் அதிகரிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இங்கு காற்றாலைகள் வளியை மேலெழுந்து குளிர்வடையச்செய்வதாலும், சூரியக்கங்கள் ஏற்டும் ஒளித்தெறிப்பை குறைவடையச் செய்வதாலும் மேற்படி மழைவீழ்ச்சிப் போக்கில் மாற்றத்தைக் கொண்டுவருகின்றன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்