காபனீரொட்சைட் மூலம் தொழிற்படும் லிதியம் பற்றரி உருவாக்கம் முயற்சியில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய பிரச்சனையாக எதிர்கொள்ளப்படுவது வளிமண்டல காபனீரொட்சைட்டு.

இவ் வளிமண்டல காபனீரொட்சைட்டினை குறைக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகளும் பல வருடங்களாக முயற்சி செய்துகொண்டு தான் உள்ளனர்.

இதில் முக்கியமாக, வெளிவரும் காபனீரொட்சைட்டானது சேகரிக்கப்பட்டு நிலத்தின் கீழாக சேமிக்கப்பட திட்டமிப்பட்டுள்ளது.

அநேகமாக சமுத்திரங்களில் சேமிக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக வளிமண்டலத்துக்கு கானீரொட்சைட்டு விடுவிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், வெப்பவிளைவும் தடுக்கப்படினும் இது செலவு கூடிய முறையாகும்.

2014 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றில் இது மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித் திறனின் 30 வீதத்தை உபயோகித்துக் கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், இதன் போது கானீரொட்சைட்டானது திண்ம வடிவிலேயே சேமிக்கப்படுவதுடன், அது வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை.

இதனால் மற்றுமொரு தரப்பு விஞ்ஞானிகள் மேற்படி காபனீரொட்சைட்டினை எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இம் முயற்சியின் பலனாகக் கண்டுபிடிக்கப்பட்டதே லிதியம் பற்றரி.

இங்கு வெளியாகும் காபனீரொட்சைட்டு பற்றரியின் மின்பகு பொருளினுள் சேமிக்கப்படுகிறது.

ஆனாலும், காபனீரொட்சைட்டானது அவ்வளவு எளிதில் தாக்கமடையக்கூடியதல்ல.

எனவே இப் பற்றரியின் தொழிற்பாட்டுக்கு ஊக்கி தேவைப்பட்டிருந்தது.

இதிலிருந்த பிரச்சனை மேற்படி உலோக ஊக்கிகள் விலையுயர்ந்ததாயிருப்பதுடன், நடைபெறும் இசைாயனத் தாக்கமானது கட்டுப்படுத்தப்பட முடியாததொன்றாகக் காணப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இதற்கு விடைகாணும் முகமாக உலோக ஊக்கிக்குப் பதிலாக காபன் ஊக்கியைப் பயன்படுத்தி மின்னிரசாயன காபனீரொட்சைட் மாற்றீட்டு முறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கு காபனீரொட்சைட்டானது ஏமைன் கரைசலினுள் செலுத்தப்பட்டு திரவ நிலையில் பயன்படுத்தப்படுகிறது.

இதன்போது காபனீரொட்சைட்டானது எளிய மின்னிரசாயன மாற்றத்திற்கு உட்படுவது அவதானிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதனால் நீடித்த காபனீரொட்சைட் மாற்றீட்டுத் தாக்கம் நிகழ்வதுடன், அதிகளவான காலல் அழுத்தமும் கிடைக்கப்பெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் இது தொடர்பான மற்றும் பல குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளதால் இத் தொழில்நுட்பம் மக்கள் பாவனைக்கு வர இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் எனத் தெருவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers