உலகில் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த சிங்க குட்டிகள்!

Report Print Kabilan in விஞ்ஞானம்

தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் முயற்சியால், செயற்கை கருத்தரிப்பின் மூலம் பெண் சிங்கம் ஒன்று 2 சிங்க குட்டிகளை ஈன்றுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. தற்போதைய சூழலில், 43 சதவிதம் சிங்கங்கள் அழிந்துள்ளதாகவும், சர்வதேச அளவில் 20 ஆயிரம் சிங்கங்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கத்தின் இனத்தை காப்பாற்ற தென் ஆப்பிரிக்காவின் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பெண் சிங்கத்திற்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யும் முயற்சியை மேற்கொண்டனர்.

அதன்படி, உடல் வலுவான ஆண் சிங்கம் ஒன்றின் விந்தணுவை சேகரித்த விஞ்ஞானிகள், அதனை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை கருதரிப்பு செய்தனர். இதன்மூலம், கருதரித்த பெண் சிங்கம் இரண்டு சிங்க குட்டிகளை ஈன்றது.

அதில் ஒரு ஆண், ஒரு பெண் சிங்க குட்டிகள் ஆகும். தற்போது ஒரே மாதிரியான தோற்றத்தில் பிறந்த இரண்டு குட்டிகளும், விலங்குகள் சரணாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அழிந்து வரும் யானை இனத்தையும், இதுபோல் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் பாதுகாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers