நுளம்புகள் மற்றும் தும்பிகள் போன்ற பெரும்பாலான பூச்சிகளின் குடம்பிகள் நீரூடகத்திலேயே பெருக்கமடைகின்றன.
இவை நிறைவுடலியாக மாறியதும் தரைக்கு இடம்பெயர்கின்றன.
இந் நீர்வாழ் குடம்பிகள் நீரில் காணப்படும் மைக்குரோ பிளாஸ்டிக்கை தற்செயலாக உள்ளெடுப்பதாகவும், குடம்பிகள் நிறைவுடலியாக மாறும்போது இவற்றின் மீதி அவ்வுடலில் சிறிதளவில் காணப்படுவதாகவும், பின்னர் இப்பூச்சிகளை உணவாகக்கொள்ளும் பறவைகளை இது சென்றடைவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜக்கிய இராச்சியத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நுளம்புள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நுளம்புகள் போன்ற நீர் மற்றும் தரை வாழ்க்கைப் பருவங்களைக் கொண்ட பூச்சிகள் காவிகளாகச் செயற்பட்டு மைக்குரோ பிளாஸ்டிக்குகளை உணவுச் சங்கிலி வழியே கடத்துவதாக தெருவிக்கப்படுகிறது.