ஏலியன்களைக் கண்டறிய நாசாவின் புதிய முயற்சி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அண்டவெளியில் இதுவரை கிட்டத்தட்ட 3,779 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை கடந்த 10 வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை.

மேலும் இக் கோள்களில் சில உயிர் வாழ்க்கைக்குச் சாதகமான சூழ்நிலைகளைக் கொண்டிருக்கின்றனவா என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவது நாம் அறிந்ததே.

இதில் முக்கியமாக மனிதர்களிலும் மேம்பட்ட நாகரீகத்தைக் கொண்ட சமுதாயம் வாழக்கூடுமா என்ற ஆய்விலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுவே தற்போது நாசாவின் புதிய முயற்சிகளாக இருக்கின்றன.

இதற்கென Technosignatures சமிக்ஞைகளை அவதானிக்கும் முயற்சியில் நாசா ஈடுபடவுள்ளது.

இந்த Technosignatures சமிக்ஞைகளை வைத்து அறிவார்ந்த உயிர்களை இலகுவாக இனங்கண்டிட முடியும்.

உதாரணத்திற்கு நமது பூமியை எடுத்துக்கொண்டால் அது எல்லா நேரமும் இச் சமிக்ஞையை வெளிவிட்டுக்கொண்டுதான் உள்ளது.

இவை பிரதானமாக ரேடியோ அலைகள் வடிவில் காலப்படுகின்றன.

தவிர இவை செயற்கை ஒளியாகவோ, அக்கோள்களிலிருந்து வரும் வெப்ப அலைகளாகவோ, வளிமண்டலத்தில் மாசுக்களாக இருக்கும் இரசாயனங்களாகவோ அல்லது லேசர் கதிப்புக்களாகவோ இருக்கலாம்.

இந் நவநாகரீக ஏலியன்களைக் கண்டறியும் முயற்சியில் ஒருபகுதியாக நாசா ஹஸ்டனில் வரும் 26 தொடக்கம் 28 ஆம் திகதிவரை NASA Technosignatures பட்டறையை நடத்தவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

இப்பட்டறை இத்துறையின் தற்போதைய நிலவரத்தை ஆராயும் நோக்குடனேயே நடாத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers