கொக்கெயின் அடிமைத்தனத்திற்கெதிராக மரபணு பொறியியல் தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இதுவரை கொக்கெயின் அடிமைத்தனத்திற்கெதிராக எந்தவொரு அனுமதிபெற்ற சிகிச்சைகளும் நடைமுறையிலில்லை.

ஆனாலும் கொக்கெயின் பழக்கத்தைக் கைவிடுவோர் பலர் வெற்றிகரமாக பழையநிலைக்குத் திரும்பிவிடுகின்றனர்.

தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மரபணு ரீதியிலான சிகிச்சைமுறையானது கொக்கெயின் அடிமைத்தனத்திலிருந்து முற்றாக விடுபட உதவுமென நம்பப்படுகிறது.

இங்கு நோயாளியின் தோலிலிருந்து பெறப்படும் கலமானது ஆய்வுகூட வசதிகளின்கீழ் மேலதிக பரம்பரையலகு சேர்க்கப்படுகிறது.

பின்னர் மரபணு மாற்றியமைக்கப்பட்ட கலமானது எண்ணிக்கையில் பெருக்கப்பட்டு நோயாளியின் தோலின் கீழாக நிரந்தரமாக பதிக்கப்படுகிறது.

இக் குறித்த பரம்பரையலகு மூலம் சுரக்கப்படும் Human Butyrylcholinesterase (hBChE) நொதியம் காரணமாக குருதியிலுள்ள கொக்கெயின் மூளை மையங்களை அடைய முன் விரைவாக அழிக்கப்படுகிறது.

சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளர்களால் எலிகளில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் காணப்பட்டிருக்கிறது.

இங்கு வெறும் 20 நிமிடங்களில் எலிகளின் வயிற்றுப்பகுதியிலிருந்து கொக்கியின் வெற்றிகரமாக அகற்றப்பட்டிருந்தது.

மேலம் சிகிச்சையளிக்கப்பட்ட எலிகள் அதன்பின்னர் கொக்கெயினை நாடிச் செல்லாதிருந்தமையும் அவதானிக்கப்பட்டிருந்தது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers