ஆதி மனிதர்கள் பேனா போன்ற கருவிகளைப் பயன்படுத்தியதற்கான வரலாற்று சான்றுகள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஆதி மனிதர்களின் கைகள் வலிமையானவையாகவும், பெரியவையாகவும் காணப்பட்டதுடன் திண்மத்தன்மை உடையனவாகவும் காணப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இவர்களால் தற்காலத்தில் நாம் பேனாக்களை கையாள்வது போன்று துல்லியமாக பயன்படுத்த முடியாதென்றே முன்னர் கருதப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்த 3D மாதிரிப் பகுப்பாய்வில் ஆதி காலத்தினர் அதிகமான நேரங்களில் துல்லியமான பிடிகளை மேற்கொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆரம்பகால நவீன மனிதர்கள் சக்திவாய்ந்த பிடிகளையும், துல்லியமாக பிடிகளையும் கொண்டிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, ஆதிகாலத்தில் மனிதர்களுக்கிடையில் தொழில் பாகுபாடு காணப்பட்டிருக்கவில்லை.

அக்காலத்து மனிதர்கள் ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட வேலைகளை தாமாகவே செய்திருந்தனர்.

ஆனால் நவீன மனிதர்களிடையே காணப்படும் தொழில் பாகுபாடு காரணமாக சிலர் துல்லியமாக பிடிகளையும், சிலர் சக்திவாய்ந்த பிடிகளையும் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கு 3D பகுப்பாய்வில் 6 பண்டைய கால மனிதர்களின் கைகளும், 6 நவீன கால மனிதர்களின் கைகளும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers