பூமிக்கு திரும்புகிறது சீனாவின் விண்வெளி ஆய்வு மையம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

சீனாவின் இரண்டாவது ஆய்வு மையமான Tiangong-2 முன்னர் திட்டமிடப்பட்டது போல பூமிக்கு திரும்புகிறது.

இது தனது இரு வருட தற்காலிக நடவடிக்கைகளை முடித்துள்ள நிலையில் அடுத்த வருட நடுப்பகுதியில் அதன் ஒழுக்கிலிருந்து நீக்கப்பட்டு அழிவுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

மேற்படி ஆய்வு மையமானது கடந்த செப்ரெம்பர், 2016 இல் சீனாவின் வடபகுதியிலுள்ள ஜியுவான் சேட்டிலைட் புறப்பாட்டு மையத்திலிருந்து ஏவப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 8.6 தொன் மதிப்புடைய இவ் விண்கலத்தில் தற்போது முக்கிய 14 பரிசோதனைகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கியமாக தாவர உற்பத்தி தொடர்பான ஆய்வு, தொகுதி தொடர்பாடல் பரிசோதனைகள் மற்றும் ரோபேட்டிக் ஆர்ம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தனது நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ள நிலையில் இது வரும் ஜுலை, 2019 இல் அதன் ஒழுக்கிலிருந்து நீக்கப்படும் என சீனா தற்போது அறிவித்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers