வியாழனின் அழகிய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டது நாசாவின் ஜுனோ

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

வியாழன் கிரகத்தை ஆராயவென நாசாவால் அனுப்பப்பட்ட ஜுனோ விண்வெளி ஓடமானது அண்மையில் அதன் அழகான புகைப்படமொன்றை படம்பிடித்து வெளியிட்டுள்ளது.

இப் புகைப்படமானது இம்மாதம் 6 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்தருணம் மேற்படி ஓடமானது அக்கோளின் முகில்களுக்கு மேலே சுமார் 7,600 மைல்கள் தொலைவில் இருந்துள்ளது.

ஜுனோவானது 2011, ஓகஸ்டு 5 ஆம் திகதியன்று விண்ணில் ஏவப்பட்டிருந்தது.

இது 2021, ஜுலை வரையில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென தெருவிக்கப்படுகிறது.

இந் நடவடிக்கையின் மூலமாக வியாழனின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய பல அபூர்வ தகவல்களை அறியமுடியும் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களுள் வளிமண்டலக் கூறுகள், வெப்பநிலைகளை ஆராய்தல் மற்றும் அதன் காந்த, ஈர்ப்புப் புலங்களை வரைபடமாக்குதல் என்பன அடங்கும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்