Ryugu பாறைக்கோளிலிருந்து புகைப்படங்களை புவிக்கு அனுப்பியது ஜப்பான் ரோவர்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஜப்பான் விண்வெளி நிறுவனமான JAXA வெற்றிகரமாக பாறைக்கோளிக் மீது இரு ரோபட்டிக் ரோவர்களைத் தரையிறக்கியிருந்தது.

Hayabusa-2 எனும் விண்கலமே Ryugu எனும் விண் பாறைமீது கடந்த வெள்ளியன்று மேற்படி ரோவர்களை தரையிறக்கியிருந்தது.

இப் பாறையானது ஈர்ப்புக் குறைந்தது.

இதனால் ரோவர்கள் தாவித் தாவித் திரிந்து அதன் மேற்ரப்பு புகைப்படங்களை எடுப்பதுடன், அங்குள்ள வெப்பநிலைகளையும் ஆராயமுடியும்.

தற்போது ரோவர்களால் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை JAXA வெளியிட்டுள்ளது.

Hayabusa-2 விண் ஓடமானது கிட்டத்தட்ட 3 1/2 வருட பயணத்தின் பின்னர் கடந்த ஜீனன்று Ryugu சிறு கோளைச் சென்றடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers