யானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
352Shares
352Shares
ibctamil.com

பொதுவாக மற்றைய விலங்குகளைப் போலல்லாது யானைகளின் தோல் சுருக்கங்கள் கொண்டது, இது அதிக வெடிப்புக்கள் கொண்ட வலைத் தொகுதியாகக் காணப்படுகின்றது.

இவ் அமைப்புக் காரணமாகவே யானைகள் பிற ஒட்டுண்ணிகளிலிருந்தும், சூரியக் கதிர்ப்பிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றன.

இது அவை தமது உடல் வெப்பநிலையை சீராகப் பேணுவதிலும், நீரிழப்பைத் தடுப்பதிலும் உதவுகின்றது.

இவ் வெடிப்புக்கள் காரணமாக அவற்றில் அகப்பட்டிருக்கும் சேறானது இலகுவில் உதிர்ந்துவிடாது பாதுகாக்கப்படுகிறது.

இதனால் அது அதன் மேற்பரப்பில் சேமிக்கக்கூடிய நீரிலும் பார்க்க 5 தொடக்கம் 10 மடங்கு வரையிலான நீரை சேமிக்க முடிகிறது.

இந் நீர் ஆவியாகும் போது யானையின் உடலைக் குளிர்வடையச் செய்து வெப்பச் சமநிலையைப் பேணுவதாக தெருவிக்கப்படுகிறது.

சுவிர்ஸலாந்து - ஜெனீலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்த ஆய்வொன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்