பங்கசுக்களால் அழிய நேரிட்ட தவளையினம்: மீண்டெழுந்த அதிசயம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
79Shares
79Shares
ibctamil.com

ஒரு தசாப்த காலப்பகுதியினுள் பங்கசுக்களால் பாரிய அழிவைச் சந்தித்த தவளை இனம் பின்னர் அதே பங்கசுடன் ஒன்றுசேர்ந்து வாழும் ஆற்றலைப் பெற்றிருந்தது.

பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த கள ஆய்வில், பங்கசு தொற்றுக்குள்ளாக்கப்பட்டிருந்த தவளைகளும், தொற்றுக்குள்ளாக்கப்படாத தவளைகளும் ஒரே வீதத்தில் பிழைத்து வாழ்வது அறியப்பட்டிருந்தது.

2004 இல், El Copé - Panama பகுதியில் வாழ்ந்த தவளைகள் ஆயிரக் கணக்கில் அழியத்தொடங்கியிருந்தன.

அவ்விடத்துக்கேயுரித்தான அந்த இனத்தின் அரைவாசிக் குடித்தொகை அழிந்து போயிருந்தது.

இதற்கு Batrachochytrium dendrobatidis எனும் பங்கசே காரணமாயிருந்தது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்று தவளைகள் எவ்வாறு தம் எதிரிகளுடன் சேர்ந்து வாழும் ஆற்றலைப் பெற்றிருந்தன என்பது தொடர்பாக விளக்கியுள்ளது.

அதன்படி, தவளைகள் சூழல் மற்றும் பரிணாம மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கலாம்.

இதன்விளைவாக இவ்விரு சமுதாயங்களும் ஒன்றாக வாழக்கூடிய இயல்புகளைப் பெற்றிருக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றது.

இவ் ஆய்வு விபரங்கள் தற்போது Ecological Applications எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்