விண்வெளிக்கு பயணித்த ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வீரர்கள்

Report Print Kabilan in விஞ்ஞானம்
59Shares
59Shares
ibctamil.com

விண்வெளிக்கு புறப்பட்ட ரஷ்ய ராக்கெட்டில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், அவசரமாக தரையிறக்கப்பட்டதில் இரண்டு வீரர்கள் உயிர் தப்பினர்.

கஜகஸ்தானில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் ஒன்று, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. அதில் ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்சே ஓவ்சீனின், அமெரிக்காவின் விண்வெளி வீரரான நிக் ஹேக் ஆகிய இரண்டு பேர் பயணித்தனர்.

ராக்கெட் 6 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்கள் இருவரும் பேலிஸ்டிக் எனப்படும் அவசர கால இறங்கு வாகனம் மூலம் பாதுகாப்பாக வெளியேறி தப்பித்துள்ளனர்.

பின்னர் இருவருக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. கோளாறு ஏற்பட்ட சோயுஸ் ராக்கெட், மிகவும் பாதுகாப்பான ராக்கெட் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இச்சம்பவம் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்