பனியுக மனிதர்களுக்கும், நமது மூதாதையர்களுக்குமிடையே நெருக்கமான உறவுகள் இருந்துள்ளதாகவும், அதன் விளைவாக தற்போதும் அவர்களின் பரம்பரைத் திரவியம் நவீன மனிதர்களில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நவீன மனிதர்களுக்கு சில வைரைஸ் தாக்கங்களைச் சமாளிக்கும் திறன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஸ்ரான்போட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்த ஆய்வில், நமது மூதாதையரில் பெறப்பட்டிருந்த DNA தொடரொழுங்கானது சில வைரசுக்களுக்கெதிரான புரதங்களைத் தொகுப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பனியுக மனிதர்களிலிருந்து நம் மூதாதையர் பெற்றிருந்த இந்தப் பரம்பரைத் திரவியங்களே நவீன மனிதர்களில் மரபணு ரீதியிலான பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இத் தன்மை மாறல்கள் மூலம் தோன்றியிருப்பின் அதற்கு நீண்டகாலம் எடுத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கு ஆராயப்பட்டதில் நம்மில் உருவாக்கப்படும் 4,500 இற்கும் மேற்பட்ட வைரஸ் எதிர்ப்புப் புரதங்கள் அனைத்தும் ஆதி மனிதர்களின் DNA உடன் பொருந்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து 152 வைரஸ் எதிர்ப்புப் புரதங்களுக்குரிய பரம்பரையலகுகள் இருவகை குடித்தொகைகளிலும் ஒத்திருப்பது தெரியவந்துள்ளது.