அடுத்தகட்ட சோதனைகளுக்காக ரைகு பாறை மீது லான்டரை தரையிறக்குகிறது ஜப்பான்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஜப்பானின் Hayabusa-2 விண்கலமானது கடந்த செப்ரெம்பர் 21 இல் இரு ரொபோட்டிக் ரேவர்களைத் தரையிறக்கியிருந்தது.

தற்போது இது "Mascot" எனும் ஜேர்மன் - பிரொஞ்சு லான்டரை தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ரைகு கோளிலிருந்து 20 கிலோமீட்டர்கள் உயரத்தில் காணப்பட்டிருந்த Hayabusa-2 விண்கலமானது கடந்த செவ்வாய் படிப்படியாக தனது உயரத்தைக் குறைக்க ஆரம்பித்துள்ளது.

இது அக்கோளின் தரையிலிருந்து 56 மீட்ர்கள் உயரத்தினை அடையும்போது மேற்படி லான்டரைத் தரையிறக்கும் எனத் தெரியவருகிறது.

இவ் லான்டர் வெறும் 10 கிலோகிராம் திணிவுடையது.

எனவே இது, ரைகு கோளானது ஈர்ப்புக் குறைந்த கோளாகையால் குறித்த உயரத்திலிருந்து விழும்போது 30 சென்டிமீட்டர் உயரத்திலிருந்து ஒரு கடதாசியை விழச்செய்தால் அது எவ்வாறு விழுகிறதோ அதோபோன்றே விழும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இவ் லான்டரானது தரையிறங்கியதும் அக் கோளின் மேற்பரப்புக் கனிமக் கூறுகள் தொடர்பாகவும், காந்தப் புலத்தின் தன்மை தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொள்ளும் எனத் தெரியவருகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்