ரைகு சிறுகோளிலிருந்து சூரியனைப் படம்பிடித்து அனுப்பியது ஜப்பானிய ரோவர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ரைகு எனும் பாறைக் கோளை ஆராயவென ஜப்பான் இரு ரோவர்களை அனுப்பியிருந்தது.

மேற்படி ரோவர்கள் கடந்த செப்ரெம்பர் 21 ஆம் திகதியன்று பாறைக்கோளில் தரையிறக்கப்பட்டிருந்தது.

அன்று தொடங்கி அவ் ரோவர்கள் பல சுவார்ஸ்யமான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவை தற்போது அக்கோளிலிருந்து நகரும் சூரியனைப் படம்பிடித்து வெளியிட்டுள்ளன.

இதில் ஒரு புகைப்படத்தில் ரோவரின் ஆண்டெனா மற்றும் முள்ளின் நிழல்கள் தெரிவதை நம்மால் காணமுடிகிறது.

இங்கு காணப்படும் முள்போன்ற அமைப்பானது ரோவர்கள் அக் கடினமான தரைகளில் தத்தித்திரியும் போது உண்டாகும் உராய்வைக் குறைக்கவென அமைக்கப்பட்ட அமைப்பாகும்.

இவ்விரு ரோவர்களும் Hayabusa 2 எனும் விண்வெளி ஓடத்தினால் தரையிறக்கப்பட்டிருந்தன.

இவ் ஓடம் வரும் ஒக்ரோபர் பிற்பகுதியில் தானகவே தரையிறங்கி அங்குள்ள மாதிரிகளைச் சேகதித்து பூமிக்குத் திரும்பும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers