வினோத உருவத்தை பதிவு செய்த நாசாவின் தொலைகாட்டி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விண்வெளி ஆராய்ச்சியில் மும்முரமாக செயற்பட்டு வரும் நாசா நிறுவனம் நடைபெறும் மாற்றங்களை அவதானிப்பதற்காக தொலைகாட்டிகளை தயார் நிலையில் வைத்துள்ளது.

இவ்வாறு வைக்கப்பட்டிருந்த ஹபிள் தொலைகாட்டியில் வினோத உருவம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது சிரிக்கும் முகத் தோற்றத்துடன் ஒளிரும் நட்சத்திரங்களை படம் பிடித்துள்ளது.

இவ் உருவம் ஸ்மைலியை ஒத்ததாக காணப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட இவ் உருவமானது பால்வீதியில் அமைந்திருந்தது.

இதேவேளை ஹபிள் தொலைகாட்டியானது நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை படம் பிடிப்பதற்காகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்