புதிய சரித்திரம் படைத்தது நாசாவின் இன்சைட் லேண்டர் ரோபோ

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

செவ்வாய் கிரகம் தொடர்பிலான மேலதிக ஆராய்ச்சிகளுக்காக சில நாட்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் இன்சைட் லேண்டர் எனும் ரோபோ தரையிறக்கப்பட்டமை தெரிந்ததே.

இந்த ரோபோவானது சுமார் 6 மாத கால பயணித்தின் பின்னர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து சில புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியிருந்தது.

இந்நிலையில் இந்த ரோபோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதாக நாசா இன்சைட் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இதன்படி இதற்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் பயன்படுத்தப்பட்ட ரோபோக்களை விடவும் அதிக மின்சக்தியை ஒரு நாளில் இன்சைட் ரோபோ பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தளவு பாறைகளும், அதிக மணலையும் கொண்ட பிரதேசத்தில் ஒரு நாள் முழுவதும் ஆய்வில் ஈடுபட்டபோதே இவ்வாறு அதிக மின்சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers