குளவிகளில் நச்சுப்பதார்த்தத்திலிருந்து ஆண்டிபயோட்டிக் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

குளவிகள் மிகவும் ஆபத்து வாய்ந்த பூச்சியினமாக காணப்படுகின்றன.

இவற்றில் காணப்படும் நச்சுப்பதார்த்தமானது கொடிய விஷம் இல்லை ஆயினும் கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடியது.

இவ்வாறான நச்சுப்பதார்த்தத்திலிருந்து ஆண்டிபயோட்டிக் தயாரிக்கும் முயற்சியில் MIT விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியாக்களுக்கு எதிராகவே இப் புதிய ஆண்டிபயோட்டிக் உருவாக்கப்படுகின்றது.

இந்த ஆண்டிபயோட்டிக் ஆனது பக்டீரியாக்களைக் கொல்லும்போது மனிதர்களுக்கு எந்தவிதமான ஆபத்துக்களையும் ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது உருவாக்கப்பட்ட பின்னர் முதலில் சுண்டெலிகளில் பரீட்சிக்கப்படும்.

பரீட்சிப்பு வெற்றியளிப்பின் மனிதர்களில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்