செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம்: பிரம்மிக்க வைக்கும் பாரிய பனிப்பள்ளத்தாக்கு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

செவ்வாய் கிரகத்தில் பாரிய பனிப்பள்ளத்தாக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிலையத்தினால் இந்த ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Korolev என பெயரிடப்பட்டுள்ள 81.4 கிலோ மீற்றர்கள் விட்டம் கொண்ட பகுதியிலேயே இந்த பனிப்பள்ளத்தாக்கு காணப்படுகின்றது.

இப் பனிப்பள்ளத்தாக்கின் விட்டமானது சுமார் 2 கிலோ மீற்றர்கள் வரையில் இருக்கின்றது.

இதற்கான ஆதாரங்களை ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் Mars Express எனும் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இவ் விண்கலமானது 2003 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அதனை கொண்டாடும் முகமாக இந்த அரிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers