தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தைக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தை ஒன்றிற்கு Spina Bifida எனும் முள்ளந்தண்டு நோய் ஏற்பட்டுள்ளது.

எனவே சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அதனை மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

Spina Bifida எனும் குறித்த பாதிப்பானது குழந்தை பிறந்தபின்னர் நடப்பதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்பதனாலேயே இவ்வாறு சத்திரகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எனினும் இவ்வாறு தாய் வயிற்றில் குழந்தை இருக்கும்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்னர் இவ் வருடத்தில் மாத்திரம் இரு தடவைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் ஆண்டுதோறும் 200 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் Spina Bifida தாக்கத்துடன் பிறப்பதாக புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers