மீண்டும் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப தயாராகும் நாசா: காரணம் யார் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

நிலவில் முதன் முதலாக காலடி பதித்த விஞ்ஞானிகள் என்ற பெருமை அமெரிக்கர்களிடமே இருக்கின்றது.

இந்நிலையில் இரண்டாவது முறையாகவும் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு நாசா விண்வெளி ஆய்வு மையம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 5 வருடங்களிற்குள் விண்வெளி வீரர்கள் மீண்டும் நிலவிற்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பல அதிரடிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அதேபோன்றே Jim Bridenstine என்பவரை நாசாவின் நிர்வாகியாகவும் நியமித்திருந்தார்.

இவரது தலைமையில் National Space Council இன் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இக் கூட்டத்திலேயே Right On Time எனும் சேலெஞ்சின் ஊடாக இத் திட்டத்தினை 2024 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 50 வருடங்களுக்கு முன்னர் அப்பலோ 11 எனும் விண்கலத்தின் ஊடாக விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்கியிருந்ததுடன், அண்மையில் சீனாவும் நிலவின் சேய்மையான பகுதிக்கு தனது விண்கலத்தினையும், ரோபோவினையும் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்