விண்கல்லின் மேற்பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்த ஜப்பான்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

Hayabusa2 எனும் விண்வெளி ஓடம் மூலமாக Ryugu எனும் விண்கல்லின் மீது துப்பாக்கி சன்னங்களை சுட்டு ஏற்கனவே ஜப்பான் பரிசோதித்திருந்தது.

இப்படியான நிலையில் தற்போது வெடிகுண்டு ஒன்றினை வெடிக்க வைத்து மற்றுமொரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பரிசோதனையானது கடந்த வியாழக்கிழமை Japanese Space Agency (JAXA) இனால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

செக்கனுக்கு 2 கீலோமீற்றர்கள் எனும் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் Ryugu விண்கல் மீது துல்லியமாக குறித்த வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டானது 2 கிலோகிராம்கள் எடை கொண்ட செப்பு உலோகத்தை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பூமியைத் தாக்கக்கூடிய விண்கற்களை தாக்கி அழிக்கும் முயற்சிக்கு அடித்தளமாகவே இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்