அண்டவெளியில் இனங்காணப்பட்ட விண்கற்கள் எவ்வளவு தெரியுமா? அதிர வைக்கும் புள்ளிவிபரம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் பூமி உட்பட தாம் பயணிக்கும் பாதையில் காணப்படும் வெவ்வேறு வான்பொருட்களையும் தாக்கக்கூடியன.

இதனால் விஞ்ஞானிகள் பூமியை தாக்கவரும் விண்கற்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வில் ஈடுபடுவதுடன், அவற்றை கண்காணித்தும் வருகின்றனர்.

தற்போது வரையில் சுமார் 20,022 விண்கற்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி 107 வால்நட்சத்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ் வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப் பகுதியில் 731 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 208 விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers