இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் ஒளி அமைப்புக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளில் பல வர்ணங்களில் மின்குமிழ்கள் ஒளிர விடப்படும்.

இதில் லேசர் மின்விளக்குகளும் அடங்கும்.

இவ்வாறான மின்விளக்குகளால் வலிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் பகல் நேரங்களில் இவ்வாறான இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களையும், இரவு நேரங்களில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது இரவு நேரங்களில் கலந்துகொள்பவர்களிலேயே குறித்த மின்விளக்கு ஒளியின் காரணமாக வலிப்பு உண்டாவதற்கான தாக்கம் அதிகமாக இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers