ஒன்றாக இணையும் இரு நட்சத்திரங்கள்: கண்டுபிடித்து அசத்திய ஆராய்ச்சியாளர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

B14-65666 எனும் நட்சத்திரத்தில் குமிழ் வடிவம் ஒன்று தோன்றுவதை ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருந்தனர்.

எனினும் அந்த குமிழ் வடிவம் இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைவதால் ஏற்பட்ட தோற்றம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

டோக்கியோவிலுள்ள Waseda பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இதனை கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 13 பில்லியன் வருடங்களுக்கு முன்னரே இவ் இரு நட்சத்திரங்களும் ஒன்றிணைவதற்கு ஆரம்பித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் இவ்வாறு ஒன்றிணையும் இரு நட்சத்திரங்களினதும் மொத்த திணிவானது சூரியனின் திணிவைப் போன்று 770 மில்லியன் மடங்கு இருக்கும் எனவும் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்