விவசாய நிலங்களில் களைகளை அகற்றும் ரோபோ வாத்து: ஜப்பானியர்கள் அசத்தல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

கடந்த நூறு வருடங்களாக ஆசியாவில் உள்ள சில நாட்டு விவசாயிகள் தமது விவசாய நிலங்களில் உள்ள பீடைகளை நீக்குவதற்கு வாத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது 21 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ரோபோ வாத்துக்கள் உருவாக்கப்பட்டு அவை களைகளை அகற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜப்பானின் கார் வடிவமைப்பு நிறுவனமான நிசான் இந்த வாத்து ரோபோக்களை வடிவமைத்துள்ளது.

1.5 கிலோகிராம்கள் எடை கொண்ட இந்த வாத்து ரோபோக்களை தற்போது ஜப்பான் நாட்டு விவசாயிகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த ரோபோக்கள் விரைவில் ஏனைய நாடுகளிலும் பயன்படுத்தப்படலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...